ஊழலுக்கும் மோசடிகளுக்கும் இடமளிக்கும் விதத்திலேயே சில திணைக்கள அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்து விவசாயிகள் பிரதமரிடம் மகஜர் கையளிப்பு

Published By: Digital Desk 2

16 Feb, 2025 | 08:50 PM
image

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) பொது அமைப்புகளால்  ஏற்பாடு செய்த  நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பிரதமரிடம் தமது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை கையளித்திருந்தனர்

அதாவது புலிங்கதேவன் முறிப்பு  பிரதேசத்தில் உள்ள கமக்கார அமைப்பினால் தொடர்ந்தும்  இடம் பெற்ற முறைகேடு தொடர்பில்  கடந்த 11- 12- 2024 அன்று திகதியிட்டு மாவட்ட அரச அதிபர் பிரதி ஆணையாளர் கமநல அபிவிருத்தி    திணைக்களம் கமநலசேவை நிலையம் கண்டாவளை  ஆகியோருக்கு கையளித்த  கடிதம் தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை  தொடர்பில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவானது  கடந்த 10-12-2024 அன்று உரிய கமநல அபிவிருத்தி சட்டவிதிகளுக்கு அமைய   நடைபெறவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதாவது மேற்படி புதிய நிர்வாகத் தெரிவிற்கான  அறிவித்தல்கள் உரிய முறையில் விவசாயிகளுக்கு  அறிவிக்கப்படாமலும்  முழுமையான விவசாய அங்கத்தவர்களின் பெயர் பட்டியல் பதினான்கு  நாட்களுக்கு முன்னர் காட்சிப்படுத்தப்படாமலும்  குறித்த தெரிவு முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 593  விவசாயிகளை கொண்ட   குறித்த பிரதேசத்தில் 519 விவசாயிகளிடமிருந்து அங்கத்துவப் பணம் நுழைவு கட்டணம் என்ற வகையில்  தலா ஐந்நூறு ரூபாவும் வருடாந்த சந்தாப்பணம் என்ற வகையில்  தலா நுற்று இருபது ரூபாவும்  அறவீடு செய்யப்பட்டுள்ளதுடன் 519 பேரும் முழுமையான  அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.

ஆனாலும் ஒரு கமக்கார அமைப்பினை  தெரிவு செய்ய வேண்டிய விதிகளுக்கு மாறாக முழுமையான விவசாயிகளின் பங்கு பற்றுதன்றி 112 விவசாயிகளையும் 23 பார்வையாளர்களையும் கொண்டு 269 பேரின் பெயர்களை கொண்டு போலியாக தயாரிக்கப்பட்ட அங்கத்தவரபட்டியலையும் வைத்து  குறித்த தெரிவு முறைகேடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 11-12-2024  திகதி  விவசாயிகளாகிய எங்களது ஆட்சேபனையை தெரிவித்து மாவட்ட அரச அதிபர் பிரதி ஆணையாளர்  கமநல அபிவிருத்தி திணைக்களம் கமநல சேவை நிலையம் கண்டாவளை  ஆகியோருக்கு கடிதங்களை வழங்கிய போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக அமைப்பின் முன்னைய  நிர்வாகமானது நீண்டமாக  புனரமைப்பு செய்யப்படாமல் இருந்துள்ளதுடன்  தற்போதைய முறைகேடான தெரிவின் மூலம்  மீளவும் முன்னைய உறுப்பினர்களே  திட்டமிட்டு வகையில் நிர்வாகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கையின் போது 18 விவசாயிகளுக்கு சொந்தமான 58.2சிறுபோக நீர்வரி பங்குகளை மோசடி செய்து விற்பனை செய்தமை  இதே காலப்பகுதியில் இந்த பிரதேசத்தை சேர்ந்த விவசாயியான ச. சிவபாதம் என்பவருக்கு சொந்தமான 4712 நீர்வரி இலக்கம் கொண்ட 09.2  ஏக்கர் நீர்வரி பங்கினை  அவருக்கு வழங்காது தடுத்து முறைகேடாக  பெற்று  விற்பனை செய்தமை தொடர்பாக விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக மாவட்ட அதிபர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மேற்படி விடங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும்  இதுவரை  அதற்கான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவவதுடன்  இலங்கை திருநாட்டில் மலர்ந்துள்ள ஊழலற்ற அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகளாகிய நாங்கள் குறித்த முறைப்பாட்டினை செய்கின்றோம்.

எனவே இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி ஊழலற்ற வகையில் ஜனநாயக முறைப்படி நல்லதொரு  நிர்வாகத்திற்கான  தெரிவினை மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுமாறு தய்களை தயவாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும்  இன்று பிரதமரிடம் கையளித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28
news-image

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி....

2025-03-15 18:52:01
news-image

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இளைஞன்...

2025-03-15 16:56:03
news-image

21 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன்...

2025-03-15 16:43:26
news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09