புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான, நிலக்கிளி நாவலை எழுதிய அண்ணாமலை பாலமனோகரனின் “மிஸ்டர் மங்”எனும் நூல் வெளியீட்டுவிழா நேற்று சனிக்கிழமை (15) பரிமத்தியா ஆலய மண்டபம் தண்ணீரூற்று, முள்ளியவளையில் இடம்பெற்றிருந்தது.
முழவம்” கலையகத்தினரின் ஏற்பாட்டில் ஆரம்பமாகிய நிகழ்வானது மங்கல விளக்கேற்றல், வரவேற்புரை, தலைமையுரை, நூலாசிரியர் அறிமுகஉரை, இடம்பெற்று நூல் வெளியீடு இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து நூலின் முதற்பிரதியை கமலராணி பாலமனோகரன் வழங்க லண்டனை சேர்ந்த தி.தியாகராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூல் விமர்சன உரை, சிறப்பு பிரதிவழங்கல், ஏற்புரை இடம்பெற்று நன்றியுரையுடன் நிறைவு பெற்றிருந்தது.
குறித்த நூல் வெளியீட்டுவிழாவில் அருட்தந்தை ஜேம்சன் ஞானப்பொன் ராஜா, லண்டன் திருநாவுக்கரசு தியாகராஜா, கவிஞர்களான சோ.ப, முல்லைச்செல்வன், தீபச்செல்வன், கருணாகரன், அந்தோனிப்பிள்ளை, முழவம் கலையகத்தினர், ஆசிரியர்கள்,வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM