ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் பணிப்புரை

16 Feb, 2025 | 05:03 PM
image

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இந்தப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களும் முழுமையாக நன்மையடையும் வகையில் தமிழ்மொழிமூலமான பயிற்சி வகுப்புக்களையும் ஆரம்பிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு பிரதமர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (16) சென்றிருந்தார். 

அங்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோருடன், ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் அதிபர் மற்றும் பணியாளர்கள் பிரதமரை வரவேற்றனர். இதன் பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது,  கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு இளையோர் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் இணைய முடியாத நிலைமை காணப்படுவதாக மாவட்டச் செயலர் மற்றும் ஆளுநர் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.

ஆங்கிலமொழி மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுதல் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தியடைந்திருத்தல் என்பன தகைமையாகக் காணப்படுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பலர் இணைய முடியாத நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டனர். 

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த பிரதமர், தமிழ் மொழி மூலமான பயிற்சிகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார். 

கலந்துரையாடலைத் தொடர்ந்து இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தையும் பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் சுற்றிப் பார்வையிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03