இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் உயர்வடையும்

16 Feb, 2025 | 04:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய மற்றும் பூகோள காரணிகளால் 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் மூன்று மாதங்கள் முதல் நீண்ட காலப்பகுதிக்கு பணவீக்கம் கட்டம் கட்டமாக உயர்வடையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நிதி கொள்கையில் தரப்படுத்தலுக்கமைய அரச செலவுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு, தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதி மீதான தடையை தளர்த்தல், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைதல், ஆகிய காரணிகளுடன் பூகோள மட்டத்தில் பொருட்களின் விலை உயர்வடைந்தமை, பண்டிகை காலத்தின் போது ஏற்படும் உயரளவிலான கேள்வி, எதிர்வரும் மூன்று மாதங்கள் முதல் நீண்ட காலப்பகுதிக்கு பணவீக்கம் கட்டம் கட்டமாக உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி ஏற்படும் அவதானம் காணப்படுகின்ற நிலையில்,பூகோள மட்டத்தில் உணவு பொருட்களின் விலை கட்டம் கட்டமாக உயர்வடையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கான நிதி கொள்கை அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

2022 மற்றும் 2023 ஆகிய காலப்பகுதிகளில் உயர்மட்டத்தில் காணப்பட்ட பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு சடுதியாக குறைவடைந்தது.இருப்பினும் 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் பணவீக்கம் உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில் 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 5 சதவீதமளவில் உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அது 2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பணவீக்கத்தின் சதவீதத்தில் இருந்து 2 சதவீதமளவில் மேலும் உயர்வடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பணவீக்கத்தின் தளம்பல் நிலை தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த ஆண்டுக்கு இணையாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியிறுப்பு, நீர்,சமையல் எரிவாயு,ஏனைய எரிபொருள் பயன்பாட்டுக்கான பணவீக்கம் நூற்றுக்கு 3.68 சதவீதத்தால் அதாவது 6794.18 ரூபாவால் குறைவடைந்துள்ளது.இருப்பினும் வீட்டு வாடகை உயர்வடைந்துள்ளது.

 உணவு மற்றும் மதுபானம் அல்லாத பானங்களின் பணவீக்கம் நூற்றுக்கு 0.08 அதாவது 1544.77 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அரிசிக்கான செலவு 666.66 ரூபாவாலும்,தேங்காய்க்கான செலவு 1537.81 ரூபாவாலும், தேங்காய் எண்ணெய்க்கான செலவு 297.65 ரூபாவாலும் உயர்வடைந்துள்ளது.

போக்குவரத்துக்குரிய பணவீக்கம் -0.50 அதாவது 925.97 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன்,வாகன பராமரிப்புக்கான செலவு 201.39 ரூபாவால் உயர்வடைந்துள்ளதாக நிதி கொள்கை அறிக்கையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.

நிதி கொள்கையில் தரப்படுத்தலுக்கமைய அரச செலவுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு, தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதி மீதான தடையை தளர்த்தல்,ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைதல், ஆகிய காரணிகளுடன் பூகோள மட்டத்தில் பொருட்களின் விலை உயர்வடைந்தமை,பண்டிகை காலத்தின் போது ஏற்படும் உயரளவிலான கேள்வி, எதிர்வரும் மூன்று மாதங்கள் முதல் நீண்ட காலப்பகுதிக்கு பணவீக்கம் கட்டம் கட்டமாக உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேன்ட் கணிய எண்ணெய்யின் விலையின் சாதாரண வீதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவடைவதுடன், 2026 ஆம் ஆண்டு மேலும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி ஏற்படும் அவதானம் காணப்படுகின்ற நிலையில்,பூகோள மட்டத்தில் உணவு பொருட்களின் விலை கட்டம் கட்டமாக உயர்வடையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புக்கு மிகவும் தீர்மானமிக்க துறைகளாக காணப்படும் பூகோள வர்த்தகம்,முதலீடு,மீண்டெழும் செலவுகள்,பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதற்கு ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் செல்வாக்கு செலுத்தும் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை மாற்றத்தினால் இறக்குமதிக்கான தீர்வை வரி உயர்வடையும். 2024 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக 10.7 சதவீதத்தால் உயர்வடைந்திருந்தாலும்,இந்த ஆண்டு முதல் காலப்பகுதியில் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2025.01.28 ஆம் திகதி ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25
news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12