வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேகநபர் 30 வயதுடைய புஷ்பராஜ் விக்னேஸ்வரம் என்பவராவார்.
பல பொலிஸ் நிலையங்களால் விசாரிக்கப்பட்டு வரும் துப்பாக்கிசூட்டு முயற்சி, துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேகநபராவார்.
சந்தேகநபர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கை காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தவுடன், விக்னேஸ்வரமும் அவரது 25 வயதுடைளஸ்ரீய மனைவியும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர் மீது 2017 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்தமை, 2018 ஆம் ஆண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை, 2022 ஆம் ஆண்டு கரையோரப் பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்தமை, கொட்டாஞ்சேனையில் ஹெரோயின் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM