பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது

Published By: Digital Desk 7

16 Feb, 2025 | 02:29 PM
image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று சனிக்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்    சோனையிட்டபோது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரிடமிருந்து  05 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மற்றைய நபரிடமிருந்து  07 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

கொழும்பு 15 , ஹங்வெல்ல பகுதிகளைச் சேர்ந்த   25 மற்றும் 35 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின்  கிராண்ட்பாஸ் மற்றும் கஜிமாவத்தை பகுதிகளில், 12 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 06 கிராம்  700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த   இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் காஜிமாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்.

அத்துடன், மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரலவெல்ல பகுதியில்  07 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

மேலும்,இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50
news-image

சம்மி சில்வாவுக்கு மீண்டும் தலைவர் பதவியை...

2025-03-18 17:32:34
news-image

கோட்டாவின் தீர்மானமொன்று சட்டத்திற்கு முரணானது என...

2025-03-18 21:23:44
news-image

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுக்கு உறுதியான காலவரையறை...

2025-03-18 15:42:32
news-image

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ்...

2025-03-18 21:18:31
news-image

இலங்கை - இந்தியா பாலம் :...

2025-03-18 17:21:46
news-image

எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது ; முறையாக...

2025-03-18 15:45:12