யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு கடந்த வியாழக்கிழமை (13) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
அதனை அடுத்து, கட்டட வேலைகளை முன்னெடுத்த ஒப்பந்தக்காரர் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , கட்டட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்நிலையிலையே நேற்று சனிக்கிழமை (15) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
1996ஆம் ஆண்டு சுண்டுக்குளி மாணவி கிருஷாந்தி உள்ளிட்ட 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை 1995ஆம் ஆண்டு மற்றும் 96ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் படுகொலை செய்யப்பட்டு , செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளிகளில் புதைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகள் குறித்த மயானத்தை அண்மித்த பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM