நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் 9 இலட்சம் பேர் பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் என அகில இலங்கை பார்வைக்குறைபாடுடையவர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசன்ன விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுடனான கலந்துயைாடலில் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் ஆளுநருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. மேற்படி சந்திப்பின் போது மத்திய மாகாணத்திலுள்ள பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேற்படி கலந்துரையாடலின் போது மத்திய மாகாண பார்வைக் குறைபாடு கொண்டவர்களது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இவை தொடர்பாக தகவல்களைப் பெற்று வெகு விரைவில் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு தர முயற்சிப்பதாகவும் ஆளுநர் அங்கு தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் மத்திய மாகாண பார்வைக்குறைபாடுடையோல் சங்க நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM