(எம்.வை.எம்.சியாம்)
சர்வதேச புலனாய்வு தகவலுக்கு அமைய 36 கோடி ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் டொரன்டோ நகரிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்ற குறித்த பெண் அங்கிருந்து அபுதாபி விமானம் ஊடாக விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு சர்வதேச புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த கனேடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதான கனேடிய பெண்ணொருவர் ஆவார்.
இவரிடம் இருந்து சுமார் 36 கோடி ரூபா பெறுமதியான 36 கிலோ 152 கிராம் ஹஷீஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தனது பயணப்பையில் வைத்திருந்த ஆடைகளுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளை கொண்டுவந்துள்ளார்.
குறித்த போதைப்பொருட்கள் இலங்கையிலிருந்து பிறிதொரு நாட்டுக்கு கை மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சந்தேகிக்கிறது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM