எட்டு தசாப்தகாலத்திற்கு முன்னர் ஜப்பானின் ஆக்கிரமிப்பின் போது தாய்லாந்திற்கும் மியன்மாரிற்கும் இடையிலான மரண புகையிரதபாதையில் வேலைபார்க்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட 106 தமிழ்தொழிலாளர்களின் உடல்கள் தாய்லாந்தில் இடம்பெற்ற பௌத்தமத நிகழ்வில் தகனம்செய்யப்பட்டதாக டிடபில்யூ செய்திவெளியிட்டுள்ளது.
டிடபில்யூ இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஜனவரி மாதத்தின் இதமான வெப்பம்நிலவிய ஒரு நாளில் தாய்லாந்தின் மேற்கில் உள்ள கஞ்சனபுரியில் 106 மண்டையோடுகளும் எலும்புகளும் தகனம் செய்யப்படுவதை சில்வா குமார் மேற்பார்வை செய்தார்.
இவர்கள் தமிழ் தொழிலாளர்கள் - 80 வருடங்;களிற்கு முன்னர் ஜப்பானிய இராணுவத்திற்காக புகையிரதபாதையை உருவாக்கும்போது உயிரிழந்தவர்கள்.
இதில் உயிர்தப்பிய ஒருவரின்மகனான சில்வா குமார் பாரம்பரிய தீயிற்கு முன்னாள் நின்றுகொண்டிருந்தார்.
அடையாளமிடப்படாத கல்லறைகளில் மறக்கப்பட்டு இஅவர்களது துன்பங்கள் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டவர்களிற்கு அங்கீகாரத்தை வழங்குவதே இந்த பௌத்தமத நிகழ்வி;ன் நோக்கம்.
கஞ்சனபுரியில் ஆளுநர் மாளிகையை கட்டுவதற்காக நிலத்தை தோண்டியவேளை இந்த மனித எச்சங்கள்மீட்கப்பட்டதாக சில்வா குமார் தெரிவித்தார்.
1990 ஆரம்பத்தில் 500 எலும்புகள் மீட்கப்பட்டனஇவற்றில் 106 எலும்புகளை சில்பர்கோன் பல்கலைகழகத்தின் தொல்பொருள் பிரிவு ஜீத்யுத்த அருங்காட்சி சாலைக்கு வழங்கியிருந்தது ஏனையவற்றை சீன அமைப்பொன்று அடக்கம் செய்தது என சில்வா குமார் தெரிவித்தார்.
ஏப்பிரலில் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாக மூட தீர்மானித்துள்ளனர் இதன்காரணமாகவே மனித எச்சங்களை தகனம் செய்ய தீர்மானித்தனர்என பாங்கொங்கில் உள்ள மலேசிய இந்தியர்கள் சங்கத்தின் தலைவராக சில்வா குமார் குறிப்பிட்டார்.
ஜப்பான் இராணுவத்திற்காக புகையிரதபாதையை அமைப்பதற்கான முயற்சிகளின் போது பலர் உயிரிழக்க உயிர் தப்பிய சிலரும் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் சில்வாவின்தந்தை.தனது தந்தை தெரிவித்த விடயங்களே தன்னை இந்த முயற்சியில் ஈடுபடத்தூண்டியது என சில்வா தெரிவித்தார்.
ஜப்பானிய ஆட்சியின் போது ஆசிய தொழிலாளர்களின் உயிர்கள் பெறுமதியற்றவையாக கருதப்பட்டனஅவர்கள்அனுபவித்த கொடுமைகள் துன்பங்கள் துயரங்கள் பதிவு செய்யப்படவில்லை.அவர்களின் இறப்புகள் புறக்கணிக்கப்பட்டன.
1942 முதல் 1945 வரையிலான காலப்பகுதியில ;பலமில்லியன் ஆசிய தொழிலாளர்களை ஜப்பானிய இராணுவம் தாய்லாந்திலிருந்து மியன்மார் வரை நீண்ட புகையிரதபாதையை உருவாக்குவதற்கு பயன்படுத்தியது.
ஆசிய தொழிலாளர்களை ஜப்பானிய இராணுவம் ரொமுசா என அழைத்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசியாவை ஆக்கிரமித்திருந்தவேளை இந்த புகையிரத பாதையை அமைக்கும் பணிகள்இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM