மியன்மாரில் உள்ள இணையவழி மோசடி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்களும் இரண்டு இளம் பெண்களும் அடங்குவர்.
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து எல்லையில் இருந்து பேங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மேலும் நாள்கு இலங்கையர்கள் மியான்மாரில் தனித்தனி இணையவழி மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அண்மையில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் மற்றும் மியான்மார் பிரதிப் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடிய போது, இந்த இணையவழி மோசடி முகாம் நடவடிக்கைகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான உதவியை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கோரினார்.
இந்த இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக, மொத்தம் 13 இலங்கையர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM