பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

15 Feb, 2025 | 06:38 PM
image

எம்முடைய பெண்மணிகளில் பலருக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் தருணத்தில் தோல் பகுதிகளிலும், சளி சவ்வு பகுதிகளிலும், ஈறு பகுதிகளிலும் புற்றுநோயற்ற கட்டி பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் பியோஜெனிக் கிரானுலோமா எனக் குறிப்பிடுவார்கள் இதற்கு தற்போது நவீன சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியம் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பியோஜெனிக் கிரானுலோமா எனப்படும் கட்டி அனைத்து வயதினருக்கும் ஏற்படக்கூடியது . பொதுவாக ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களைவிட பெரும்பாலான கர்ப்பிணி பெண்களிடம் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம். இந்தத் தருணத்தில் இத்தகைய பாதிப்பு அவர்களுடைய ஈறு பகுதியில் ஏற்பட்டிருந்தால் சிசுவிற்காக சிகிச்சை எடுக்கும் மகப்பேறு வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டியதிருக்கும்.

கருத்தடை மாத்திரைகளை பாவிப்பது, மாதவிடாய் காலங்களிலும் கரு தரித்திருக்கும் காலங்களிலும் ஏற்படக்கூடிய சமச்சீரற்ற ஹோர்மோன் உற்பத்தி, பாக்டீரியா தொற்று பாதிப்பு, தோல் பகுதி அல்லது சளி சவ்வு பகுதியில் எதிர்பாராத விதமாக காயங்கள் ஏற்படுவது, மோசமான முறையில் பராமரிக்கப்படும் வாய் சுகாதாரம் என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். அதே தருணத்தில் முகம் வாய்ப் பகுதியில் உள்ள ஈறுகள், உதடுகள், நாக்கு, மூக்கு, விரல்கள் ஆகிய பகுதிகளில் இத்தகைய கட்டிகள் அதிகம் ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பிற்கு வைத்தியர்கள் உங்களுடைய தோல் தொடர்பான பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். மேலும் சிலருக்கு குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய கட்டி, பிரசவம் நிறைவடைந்த பிறகு தானாக மறையத் தொடங்கும். பிரசவத்திற்கு பிறகும் இத்தகைய கட்டி பாதிப்பை ஏற்படுத்தினால் வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் மேலும் சில பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொண்டு சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இத்தகைய கட்டியை அகற்றுவர். மேலும் வேறு ஏதேனும் பல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாத வகையில் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்வார்கள். மேலும் இந்த தருணத்தில் மகப்பேறு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையை பெற்று வாய் பகுதியில் குறிப்பாக ஈறு பகுதியில் இத்தகைய கட்டிகளை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். மேலும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாய்வழி சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் ரீஜா ரஞ்சித்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34
news-image

புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-26 17:21:25