தயாரிப்பு : சிட்டி லைட் பிக்சர்ஸ்
நடிகர்கள் : ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
மதிப்பீடு : 2.5 / 5
முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான சுசீந்திரன் வணிக ரீதியாக வெற்றி பெரும் படைப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கி இருக்கும் திரைப்படம் '2 லவ் ஸ்டோரி'. இது அசலாகவே இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கார்த்திக் ( ஜெகவீர் )மற்றும் மோனிஷா ( மீனாட்சி கோவிந்தராஜன் ) ஆகிய இருவருக்கும் பால்ய பிராயத்திவிருந்தே நட்பு ஏற்படுகிறது. பாடசாலையில் தொடரும் இவ்விருவர்களின் நட்பு கல்லூரியில் படிக்கும் போதும், அதன் பிறகு இருவரும் இணைந்து தொழில் செய்யும் போதும் நீடிக்கிறது. இந்த இருவருக்கும் இடையேயான எதிர் பாலின நட்பு இவர்களுடன் பழகுபவர்களுக்கு காதலாகவும், காதலர்களாகவும் தோன்றுகிறது. இந்த தருணத்தில் கார்த்திக்கு பவித்ரா எனும் பெண் மீது காதல் உண்டாகிறது. இருவரும் காதலிக்கும் போது பவித்ரா கார்த்திக் - மோனிஷா இடையே உள்ள நட்பு மீது சந்தேகம் கொள்கிறார். இதனை கார்த்திக் உணர்ந்து விளக்கம் அளிக்கிறார். தன் காதலரை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட குற்ற உணர்வால் பவித்ரா தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனதளவில் சோர்வடைந்த கார்த்திக்கை மோனிஷா உற்சாகப்படுத்தி மீண்டும் சந்தோஷமான சூழலுக்கு அழைத்து வருகிறார். இந்த தருணத்தில் கார்த்திக் - மோனிஷா இருவருக்கும் அவர்களுடைய பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதனால் ஏற்படும் குழப்பங்களும், அதற்கான தீர்வுகளும் தான் இப்படத்தின் கதை.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான நட்பு குறித்து உரக்க பேசும் இந்த படத்தில் இயக்குநராக சுசீந்திரனின் பங்களிப்பு குறைவு தான். வழக்கமான கதை என்றாலும் காட்சிகளில் புதுமையோ, சுவராசியமான திருப்பமோ இல்லையென்றாலும் ஒளிப்பதிவாளர்+ இசையமைப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து ரசிகர்களை காப்பாற்றுகிறார்கள்.
சுசீந்திரன் படத்தில் இடம்பெறும் வலிமையான உரையாடல்களும் மிஸ்ஸிங்.
பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ் , சிங்கம் புலி கூட்டணி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
அறிமுக நடிகர் ஜெகவீர் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அவரது திரைத்தோற்றம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. பொருத்தமான கதையையும், திறமையான இயக்குநரையும் கவனமாக தெரிவு செய்தால்.. தமிழ் திரையுலகில் நிரந்தரமாக இடம் பிடிக்கலாம். ஏனைய நடிகர்கள், நடிகைகள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.
2 K லவ் ஸ்டோரி - 'கிரிஞ்ச்'சான ஸ்டோரி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM