'டாடா', 'ஸ்டார்', 'பிளடிபெக்கர்ஸ் ' என வரிசையாக வெற்றி படங்களை அளித்து நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிஸ் ' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிஸ்' எனும் திரைப்படத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ராணி , வி டி வி கணேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். காதலர்களின் முதல் முத்தத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான ராகுல் தயாரித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் காதலர்களுக்கு இடையே முதல் முத்தம் குறித்த உரையாடல் இடம் பெறுவதும், காட்சிகள் இளமையாக இருப்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM