'யங் ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'டிராகன்' எனும் திரைப்படம் - கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அழுத்தமான படைப்பாக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிராகன் ' எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ் .ரவிக்குமார் , கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ் ,தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம் - கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையிலுள்ள நட்சத்திர ஹொட்டேலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், '' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த படம் மிக எளிதாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் இந்தக் கால இளைஞர்களுக்கான ஒரு நீதியை அவர்கள் விரும்பும் பாணியில் சொல்லி இருக்கிறார். இது ஒரு எளிமையான கதை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உந்துதலை வழங்கும் படமாக இருக்கிறது. இதற்காக அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரியில் படிக்கும் இளைஞன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அவனுடைய வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவத்தின் மூலமாக விவரித்திருக்கிறார். சொன்ன விதமும் உற்சாகத்துடன் இருக்கும். அவரும் மிக திறமையான படைப்பாளி. இன்னும் கூடுதல் உயரத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM