கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

15 Feb, 2025 | 06:27 PM
image

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் இடம்பெற்ற 'உயிர் பத்திகாம..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒத்த ஓசையுடன் கூடிய சொற்கள் பாடல் வரிகளில் இடம் பிடித்திருப்பதால் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும்  இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் 'வா வாத்தியார்' படத்தில் இடம்பெற்ற ' உயிர் பத்திகாம..' எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் - பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

அசத்தி ஒருத்தி நிறுத்தி அனத்தி வனத்தி கொளுத்தி அழுத்தி நகர்த்தி கடத்தி அகத்தீ  கெடுத்தா கெளுத்தி போன்ற ஒத்த ஓசையுடன் கூடிய சொற்கள் கிட்டதட்ட காதல் வந்து உச்சக்கட்ட போதை தந்து நெத்தி பொட்டில் முத்தம் வைக்க நேரம் வந்தாச்சோ ஆகிய பாடல் வரிகளும், இதற்கு மேலத்தேய தாள லயத்தில் சந்தோஷ் நாராயணனின் மயக்கும் இசையும் இணைந்திருப்பதால் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46