மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து மாணவனொருவன்  குதித்து தற்கொலை செய்வதற்கு  முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில்  கடற்படையினர் ஈடுப்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாகமுனை அம்பிளாந்துறையைச் சேர்ந்த உயர் தரத்தில் கல்வி கற்கும்  புவனுசன் என்னும் 18 வயது மதிக்கத்தக்க மாணவனே இவ்வாறு பாலத்தில் இருந்து குத்தித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.