(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் திங்கட்கிழமை (17) நடைபெறவுள்ளது.
உள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வியாக்கியாளமளித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சத்தை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வெள்ளிக்கிழமை (14) கூடிய விசேட சபை அமர்வில் வாசித்தார்.
சட்டமூலம் முழுமையாகவும், மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதியரசர்கள் குழாமில் பெரும்பான்மையினராகிய இரண்டு நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
நீதியரசர் குழாமில் மீதமுள்ள ஒரு நீதியரசர், சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படவில்லையென்பதால் அதனைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையொன்றினால் நிறைவேற்ற முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.
இதற்கமைவாக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெறுவதுடன், சட்டமூலத்தை அன்றைய தினமே வாக்கெடுப்புடன் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்படும் சட்டமூலத்தை சபாநாயகர் நாளை செவ்வாய்க்கிழமை சான்றுரைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமூலத்துக்கு, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஆலோசனை குழு அங்கீகாரமளித்துள்ளது.
உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், சட்டமாக்கப்பட்டு 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக் கோரலுக்கான திகதி அறிவிக்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM