போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது ; பிரதமர் ஹரிணி

15 Feb, 2025 | 04:36 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எமது  அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை  முன்வைத்து  அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரலகங்வில பகுதியில்  இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,  

இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?  எமது அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் எமது அரசியல் கலாசாரத்துடன் அவர்களுக்கு மோதிக்கொள்ள முடியுமா?

உண்மையில் அவர்களால் அதனை நினைத்துப் பார்க்க முடியாது.  எமது ஒழுக்க நெறிகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியுமா? முடியாது. அவ்வாறு நினைத்து பார்ப்பது வேடிக்கையான விடயமாகும்.

இதன் காரணமாகவே அவர்கள் எமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். எமது தலைமைத்துவத்தின் மீதும்  அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறான செயற்பாடுகளால் எமது அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. எமது  அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர்.

அண்மையில்  சில எதிர்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்தாமல் அதனை காலம் தாழ்த்து மாறு கோரிக்கை முன்வைப்பதை செய்திகளில் பார்த்தேன். 

இன்னும் இவர்களால் மக்களிடத்துக்கு சென்று கலந்துரையாட முடியாமல் உள்ளது. இவ்வாறான கோழைகளுக்கு அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது வேறு கனவு மாத்திரமேயாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15