(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தலைவர் பதவி எனக்கு வழங்கப்படவில்லை. கொழும்பில் நான் நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கின்றேன். அனைத்தையும் மக்களின் பொறுப்பில் விடுகின்றேன். எந்தவொரு பதவியையும் கேட்டு பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவர்கள் வெள்ளிக்கிழமை (14) நியமிக்கப்பட்டனர். மாவட்ட தலைவர்கள் நியமனத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே கலாநிதி ஹர்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு மாவட்ட தலைவர் பதவி எனக்கு வழங்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பில் நானே சிரேஷ்ட உறுப்பினர். எனினும் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்ட தலைவர் பதவியை தன்வசம் வைத்துக் கொண்டார்.
மக்கள் எனக்கு வாக்களித்திருக்கின்றனர். அவர்களுக்காக நான் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன். மக்கள் என்னுடன் இருக்கின்றனர் என்பதை தேர்தலில் நான் அறிந்து கொண்டேன். அதேபோன்று தொடர்ந்தும் பயணிப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM