இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நாளை ; கஜேந்திரகுமாரின் அழைப்பு, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து பேசப்படும்

15 Feb, 2025 | 02:38 PM
image

ஆர்.ராம் 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) காலை பத்துமணியளவில் நடைபெறவுள்ளது.

கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது முதலில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, வழக்குகளை விரைந்து இணக்கத்துடன் முடித்து வைப்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஏலவே கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற நிருவாகத்தெரிவுக்கு எதிராக திருகோணமலையில் தாக்கச் செய்யப்பட்ட வழக்கு ஜுன் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அடுத்தவிடயமாக, புதிய யாப்புருவாக்கச் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள கோரிக்கைக்கு இறுதியான பதிலளிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அதற்கடுத்தபடியாக, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனித்து களமிறங்குவது, அதில் காணப்படுகின்ற சாதகமான, பாதமாக நிலைமைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கடந்த 8ஆம் திகதி மேற்படி நிகழச்சி நிரலுடன் மத்திய குழுக் கூட்டத்துக்கு திகதியிடப்பட்டிருந்தபோதும், கட்சியின் அரசியல்குழுவின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மரணத்தினை அடுத்து அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15