யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி

Published By: Digital Desk 2

15 Feb, 2025 | 01:29 PM
image

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் வெள்ளிக்கிழமை (14) யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு  மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் ,சமூக சேவைகள்,கூட்டுறவு ,உணவு வழங்கலும் விநியோகமும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகமும் வாணிபமும்  மாகாண அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன், சிறப்பு விருந்தினராக FAIRMED செயற்றிட்ட தலைவர் ஞானரதன் பிரியரஜினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின்  திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது. 

7 வகையான மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 87 வகையான விளையாட்டுக்கள் நடைபெற்றன.

இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து,  மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு  வீரர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர்,  மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும்  கலந்துகொண்டிருந்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21