ஹோட்டல் ஒன்றின் உரிமப்பத்திரத்தை மீள புதுப்பிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பாகமுவ பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவெல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள நபரொருவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் உரிமப்பத்திரத்தை மீள புதுப்பிப்பதற்காக இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் குறித்த இலஞ்சத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தல்கிரியாகம பிரதேசத்திற்கு நேற்றைய தினம் மாலை சென்றிருந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM