அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை சனிக்கிழமை (15) முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.
இதன் போது இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உப தலைவர் சதாசிவம் யாதுராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் வருகை தந்த பார்வையிட்டதுடன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM