இரத்தினபுரி, எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பேரனால் தாக்கப்பட்டு காயமடைந்த தாத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இரத்தினபுரி, பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய முதியவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளதுடன் மருமகனின் முதல் மனைவியின் மகனும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று, மருமகனின் முதல் மனைவியின் மகன் வீட்டின் உரிமைக்காக உயிரிழந்த தாத்தாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது, பேரன் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த முதியவர் எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM