வீரகேசரி, தினக்குரல் மற்றும் யாழ். ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு அஞ்சலிக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ( 24 ) மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச்சங்க பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள நினைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு ஒன்றியத்தின் தலைவர் எஸ். ஸ்ரீகஜன் தலைமை தாங்குவார்.
தமிழ், சிங்கள பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையைச் சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புக்களுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருநு்து வெளிவரும் ஈழநாடு நாளிதழின் பிரதம ஆசிரியராக ஒரு வருடம் கடமை புரிந்தார்.
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வட பிராந்திய ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM