இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கானது அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்வதற்கு இடமளிப்பதா என்பது குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதி எதிராளி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே வழக்கு விசாரணை குறித்து ஆராயப்படும்.
இவ்வழக்கு வியாழக்கிழமை (13) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டது. இருப்பினும் வழக்கின் பிரதிவாதிகளான பா.உ சிறிதரன், பா.உ குகதாசன் மற்றும் முன்னாள் பா.உ யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கடும் தர்க்கம் இடம்பெற்றது.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டு, அதுகுறித்த விபரங்களை தாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கையில், சிறிதரன், குகதாசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சிக்குத் தெரியாமல், முன்னைய இணக்கப்பாடுகளுக்கு மாறாக தாமாகவே ஒரு திட்டத்தை முன்வைத்து, இணக்க முயற்சிகளை வேண்டுமென்றே குழப்ப முயற்சிக்கின்றனர் என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.
வழக்கின் பிரதிவாதிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாக மன்றில் சுட்டிக்காட்டிய வாதிகள் தரப்பு சட்டத்தரணி, எனவே இதற்கு இணக்கமான முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகியிருப்பதாகவும், வழக்கு விசாரணை நடத்தியே தீர்வுகாணவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா அப்பதவியிலும், உயிருடனும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதனையடுத்து வழக்கில் அவரது இடத்துக்கு பதில் தலைவரின் பெயரை பிரதிவாதியாக சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM