ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் துருக்கிக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தூதுவர் செமி லுட்பூ டர்கட் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.
துருக்கியில் கல்வி கற்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைபரிசல் கோட்டா 25 ஆக அதிகரிக்கப்படும் என்று தூதுவர் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட்டுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என துருக்கி தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு துருக்கி குடியரசின் பாராட்டினைத் தெரிவித்த தூதுவர் ' டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய மக்களின் வறுமையை மட்டுப்படுத்துவதற்கு' அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிபபிட்டுள்ளார்.
கல்வி, சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன் அதற்கான ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் கல்வி கற்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைப்பரிசில் கோட்டா 25 ஆக அதிகரிக்கப்படும் என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க துருக்கிக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM