(எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல் ட்ரம் தெரிவித்துள்ளார். அதனால் இதுதொடர்பான அறிக்கையை பெற்றுக்கொண்டு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனல் ரம்பின் தீர்மானத்துக்கு அமைய உலக நாடுகளுக்கு நன்கொடை வழங்கும் யூ எஸ் அய்ட் நிறுவனத்தின் நிதி தவறாக பயன்படுத்திய நிறுவனங்களை மூடிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரம்பின் இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். குறிப்பாக யூ எஸ் அய்ட் நிறுவனம் இலங்கைக்கு 260 மில்லிய் டொர் வழங்கி இருப்பதாக இலோன் மஸ்க் அது தொர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் இலங்கையில் ஆட்சி மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று அந்த நிதியில் 8மில்லியன் டொலர் பாலின சமத்துவத்தை அபிவிருத்தி செய்யவும் வழங்கி இருக்கிறது. அந்த பிரஜைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதனை அபிவிருத்தி செய்வது என்பது நாடு, கலாசாரம் என்றவகையில் பாதிப்பான விடயமாகும்.
பாலின சமத்துவத்தை அபிவிருத்தி செய்ய 8மில்லியன டொலர் (240 கோடி) வழங்கி இருந்தால், அது யாருக்கு வழங்கியது. எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, அதன் மூலம் யார் நன்மை பெற்றார்கள் என்ற விடயத்தை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
குறிப்பாக அரசாங்கத்தின் பிரதானி ஒருவருக்கு எதிராகவும் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஆட்சி மாற்றுவதற்கு யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் பணம் வழங்கப்பட்டிருந்தால், அது சட்டவிராேதம். ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்துக்கு யூ எஸ் அய்ட் நிறுவனத்தினால் பணம் வழங்க முடியாது.
அபிவிருத்தி திட்டங்களுக்கே நிதி வழங்க முடியும். ஆனால் ஆட்சி மாற்றவும் பணம் வழங்கப்பட்டுள்ளதாக டொனல் ட்ரம் தெரிவித்துள்ளார்.
அதனால் இதுதொடர்பான அறிக்கையை நாட்டுக்கு பெற்றுக்கொண்டு, பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு இல்லாமல் தங்களின் உறுப்பினர்கள் இதனுடன் தொடர்புபட்டிருப்பதால், அதனை மறைத்துவிட முயற்சிக்க வேண்டாம் எனவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM