(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்நியமனம் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இதன், பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன, அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, புத்தளம் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி , காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர்
கயந்த கருணாதிலக்க , கம்பஹா மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, குருணாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் பிரசன்னமாகி இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM