சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் வங்காலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோது குறித்த 5 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இதன்போது 2 மீன்பிடிப்படகுகளும் 500 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையையும் அவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மன்னார் மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.