(எம்.மனோசித்ரா)
எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலைப் போன்று, ஏனைய பிரதேசசபைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு நிகரான பலத்தைப் பெற முடியும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் , இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். அதற்காக நியமிக்கப்பட வேண்டிய வேட்பாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
35 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வேட்புமனு கோரப்பட்டாலும், அதனை தாக்கல் செய்வதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
இந்த அரசாங்கத்துக்கு மேடை பேச்சுக்கள் மாத்திரமே முடியும். செயலால் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று தற்போது நிரூபனமாகியுள்ளது.
எனவே இந்த அரசாங்கத்துக்கு விரைவில் ஒரு செய்தியைக் கூற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாகவுள்ளது. அதற்கமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் மாத்திரமின்றி ஏனைய உத்தேச தேர்தல்கள் தொடர்பிலும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தலைப் போன்று, ஏனைய பிரதேசசபைகளிலும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு நிகரான பலத்தைப் பெற முடியும். எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிட்ட போது தான் இந்த பெறுபேறு கிடைக்கப் பெற்றது. எனவே நாம் கூட்டணியமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் அரசாங்கத்துக்கு சவாலான பெருபெறுகளைப் பெறுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM