நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள மஹாஎலிய தோட்டத்தில் நேற்று (13) அதிகாலையில் தனி வீடு தாழிறங்கி, தரை மற்றும் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டன.
இதனால் அந்த வீட்டில் வசித்த நான்கு பேர் அடங்கிய குடும்பத்தினர் தற்காலிகமாக உறவினர் வீட்டில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான முதற்கட்ட உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளர், கிராம சேவகர் மற்றும் நானுஓயா பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் வேறோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும், வீட்டின் சுவர்கள் அனைத்திலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சமையலறை உட்பட இரண்டு அறைகள் முழுமையாக பாதிக்கபட்டுள்ளதாகவும் வீட்டினைச் சுற்றி நிலம் வெடித்துள்ளதுடன் நிலம் தாழிறங்கியுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.
எனவே, அந்த வீட்டில் பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM