உயர்தர மாணவர்களுக்கான நான்கு வகுப்பு அறைகள் திறப்பு விழா கடந்த 12 ஆம் திகதி கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு, லயன் சுப்ரமணியம் வாசுதேவன் மற்றும் குடும்பத்தினர், கொழும்பு மாவட்டத்தின் லயன்ஸ் கிளப், ஜனதா ஸ்டீல்ஸ் கொழும்பு, லயன் வி நடராஜ் மற்றும் குடும்பத்தினர், சத்ய மூர்த்தி, Celogen Lanka Pvt Ltd கொழும்பு, கண்டி, மாத்தளை திகன வர்த்தகர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இந் நிகழ்வில் மாணவர்களின் ஓவியங்கள் மற்றும் கட்டுரைகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து, கலை, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்,கல்விக்காக அர்ப்பணித்த சேவைக்காக லயன் சுப்ரமணியம் வாசுதேவன் மற்றும் முக்கிய பங்களிப்பாளர்களுக்கும் வித்யஜோதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
கெங்கல்ல தமிழ் வித்தியாலயம் கெங்கல்லவின் வசதியற்ற மாணவர்களுக்காக நன்கொடையாளர்களின் தாராளமான பங்களிப்புகளுக்காக அபேக்ஷா நன்கொடை சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இறுதியாக, பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM