காற்றாலை மின் திட்டம் - அடுத்த வாரம் அதானிகுழுமமும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை?

14 Feb, 2025 | 04:08 PM
image

காற்றாலை மின்திட்டம் குறித்து இந்தியாவின் அதானிகுழுமமும் இலங்கை அரசாங்கமும் அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் காற்றாலை மின் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து விலகிக்கொள்வதாக அதானி குழுமம் உத்தியோகபூர்வமாகஅறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அதானிகுழுமமும்  அடுத்தவாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளன இதன் மூலம் காற்றாலை மின் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றாக பூர்த்தியாகவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இருதரப்பும் அடுத்தவாரம் மூடியகதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமா என பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை இந்திய அரசாங்கங்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து  ஏற்கனவே 14 சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்து இந்திய தரப்பு அதிருப்தி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க  இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை அதானிகுழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயார் என தெரிவித்திருந்த அதேவேளை நிறுவனம் முன்வைத்த கட்டணங்கள் குறைக்கப்படவேண்டும் என  குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35