முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அதர்வா கதையின் நாயகனாக, காதல் இளவரசனாக, நடித்திருக்கும் 'இதயம் முரளி' எனும் புதிய படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான டி ஆர் சிலம்பரசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படம் 'இதயம் முரளி'. இந்த திரைப்படத்தில் அதர்வா , பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் , நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளரும், நடிகருமான எஸ் .தமன், நிஹாரிகா, ரக்சன், ஏஞ்சலின், பிரக்யா, 'பரிதாபங்கள்' சுதாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். உணர்வுபூர்வமான காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் அறிமுக காணொளி வெளியீடு தொடர்பாக சென்னையின் புறநகர் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அதர்வா முரளி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பேசிய அதர்வா, '' அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். இந்தத் தருணம் மறக்க முடியாதவை. இங்கு எத்தனை பேர் காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு எத்தனை பேர் ஒன் சைடாக காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒன் சைடாக காதலித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களின் உணர்வைத் தான் இந்த 'இதயம் முரளி' படம் பிரதிபலிக்கிறது. இரு மனங்களும் இணைந்து காதலிக்கும் போது எதிர்கொள்ளும் மகிழ்ச்சியை விட ஒன் சைடாக காதலிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, சந்தோஷம் ,துக்கம் ,நெருக்கடி, அழுத்தம் , இவற்றையெல்லாம் முழுமையாக விவரிக்க முடியாது. இதுபோல் ஒன் சைடாக காதலித்தவர்களுக்கு இந்த இதயம் முரளி படம் சமர்ப்பணம்.
இந்தப் படத்தில் நான் நடிப்பதற்காகவோ என் அப்பாவை நினைவுபடுத்துவதற்காகவோ இந்த பெயர் சூட்டப்படவில்லை. எனக்குள்ளும் ஒரு ஒன் சைடு லவ் இருக்கிறது. நம் ஊரில் ஒன் சைட் லவ்விற்கான அங்கீகாரம் 'இதயம்' முரளிக்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. அதனால் தான் படத்திற்கு 'இதயம் முரளி' என்று பெயர் சூட்டி இருக்கிறோம். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM