தயாரிப்பு : ஜே எஸ் கே ஃபிலிம் கொர்ப்பரேஷன்
நடிகர்கள் : பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான், ஜெ. எஸ் கே , சிங்கம் புலி மற்றும் பலர்.
இயக்கம் : ஜெ. சதீஷ்குமார்
மதிப்பீடு : 2 / 5
சிறிய முதலீட்டு திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரும், நடிகருமான ஜெ. சதீஷ்குமார் முதன்முறையாக இயக்கியிருக்கும் திரைப்படம் 'ஃபயர்' - இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கதையின் நாயகனான காசி ( பாலாஜி முருகதாஸ்) சென்னையின் புறநகர் பகுதி ஒன்றில் தனியாக சிறிய அளவிலான வைத்தியசாலை ஒன்றினை அமைத்து, அதில் வலி நிவாரணத்திற்கான பிரத்யேக இயன்முறை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார். இவர் எதிர்பாராத தருணத்தில் மர்மமாக கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? அதற்கான பின்னணி என்ன? உண்மையான குற்றவாளி யார்? என்பதனை காவல்துறை அதிகாரியான சரவணன் ( ஜெ. சதீஷ் குமார்) எப்படி விசாரித்து கண்டறிகிறார்..? என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் திரைக்கதையை காசியின் கொலை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியான சரவணன் பகிர்ந்து கொள்வது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தி ரசிகர்களை இறுதி காட்சி வரை யார் கொலையாளி? என்ற சஸ்பென்ஸை காப்பாற்றுகிறது. இந்த விடயத்தில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ஜெ.சதீஷ்குமார் வெற்றி பெறுகிறார். ஆனால் அவர் இதை சொல்வதற்காக கையாண்டிருக்கும் திரை மொழி கவர்ச்சி மிக்கதாகவும், இரண்டாம் தர ஆபாச படக் காட்சிகளை போலவும் அமைத்திருப்பது படத்தின் ஆகப்பெரிய பலவீனம்.
அதிலும் குறிப்பாக இரண்டாம் பாகத்தில் கதையின் நாயகனின் இருள் பக்கத்தை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் வணிக உத்தி என்றாலும் மட்டமான ரசனை.
சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நட்சத்திர நடிகை ரட்சிதா மகாலட்சுமி இந்த திரைப்படத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். இது அவருடைய திரையுலக வளர்ச்சிக்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக முடியுமா? என்பது நாட்கள் செல்லச் செல்லத்தான் தெரியும். இருந்தாலும் ரட்சிதா மகாலட்சுமி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என அவருடைய ரசிகர்கள் இணையத்தில் பின்னூட்டம் இடுகிறார்கள்.
கொலை வழக்கு குறித்த புலன் விசாரணையில் சதி, துரோகம், சூழ்ச்சி ஆகியவை இடம் பிடித்திருந்தாலும் அவை எவையும் பார்வையாளர்களை பெரிதாக கவரவில்லை. ஏனெனில் இந்த காட்சிகள் எதுவும் அழுத்தமாக பதிவு செய்யப்படவில்லை.
கதையின் நாயகனான காசி கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் நடிகராக அறிமுகமாக இருக்கும் பிக் பொஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்- மேலாடை இன்றி திரையில் தோன்றுவது ஒரு சில ரசிகைகளுக்கு பிடித்திருந்தாலும் பல இடங்களில் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுகிறார். இருப்பினும் கதையை வழிநடத்திச் செல்லும் நடிகராக தன் திறமையை ஓரளவு நிரூபித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி சரவணன் வேடத்தில் நடித்திருக்கும் ஜெ. சதீஷ்குமார் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரத்திற்கான நடிப்பை வழங்கவில்லை என்றே சொல்லலாம். பல இடங்களில்ந நடிக்கத் தடுமாறுவதை அப்பட்டமாக காண முடிகிறது.
படத் தொகுப்பைத் தவிர ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம் ஆகிய தொழில்நுட்ப பணிகள் குறைந்தபட்ச தரத்திலேயே இருக்கின்றன.
ஃபயர் ( Fire) - கிரையர் ( Cryer)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM