தயாரிப்பு : சிந்தியா புரொடக்சன் ஹவுஸ்
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்தே, ராதாரவி, எம். எஸ். பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, பிரேம்ஜி, சாம்ஸ், சாந்தினி தமிழரசன், கே பி ஒய் சரத் மற்றும் பலர்.
இயக்கம் : சங்கர்
மதிப்பீடு : 2/5
'வைகைப்புயல்' வடிவேலுவிற்கு நகைச்சுவை பகுதிகளை எழுதிய எழுத்தாளர் சங்கர் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் - 'தினசரி'. நடிகர் ஸ்ரீகாந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்- அவருக்கும், அவரை ரசிக்கும் ரசிகர்களுக்கும் திருப்தியை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கதையின் நாயகனான சக்திவேல் ( ஸ்ரீகாந்த்) திருமணம் கொள்வதற்கு பெற்றோரிடமும், மணமகளிடமும் , மணமகளின் குடும்பத்தாரிடமும் , 'தன்னைவிட தான் திருமணம் செய்து கொள்ளும் மணப்பெண் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும்' என்றதொரு நிபந்தனையை விதிக்கிறார். இதனால் சக்திவேலுக்கு திருமணம் நடைபெறாமல் தாமதமாகிறது. இதனால் அவரது தாயார் மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலை அடைகிறார். இந்த தருணத்தில் வெளிநாட்டில் இருந்து தாயகத்திற்கு, 'பணத்தை விட அன்புதான் பெரிது என்றும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்ல மாட்டேன்' என நிபந்தனை விதிக்கும் சிவானி எனும் பெண்ணிற்கும், சக்திவேலுக்கும் அவர்களுடைய தாயாரின் ஆலோசனைப்படி திருமணம் நடைபெறுகிறது. முதலிரவு அன்று 'நீ எவ்வளவு சம்பாதிக்கிறாய்?' என கணவன் கேட்க, அவள் திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்ல மாட்டேன் என்று சொல்ல, இவர்களின் இல்லற வாழ்க்கை சிக்கலுடன் தொடங்குகிறது. இந்த சிக்கலுக்கான தீர்வு என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
பேராசை கொண்ட நாயகன்- மோசடியாளர்களால் ஏமாற்றப்பட்ட பிறகு திருந்தினானா? இல்லையா? என்ற ஒற்றை வரி கதையை கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் எந்த காட்சியும் பார்வையாளர்களை கவரவில்லை. அது மட்டுமில்லாமல் பார்வையாளர்கள் யூகிக்கும் வகையில் திரைக்கதை பயணிப்பதால் சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது.
இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் என்றாலும் அவருடைய பழைய பாடல்களிலிருந்து கொப்பி அடித்திருப்பதால் ஒரு பாடல் கூட நினைவில் இல்லை. பின்னணி இசைக்கான காட்சிகள் இருந்தும் இசைஞானியின் கருணை பார்வை இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை என்று சொல்லலாம்.
இளையராஜாவின் இசையில் வெளியாகி ஹிட் அடித்த பாடல்கள் பிட்டு பிட்டாக வருகிறது. ரசிப்பதற்கு பதிலாக எரிச்சலை தான் தருகிறது.
சக்திவேலாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி வழங்கி இருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் அடர்த்தி இல்லாததால் இவரது உழைப்பு வீழலுக்கு இறைத்த நீராகிறது.
சிவானி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளரும் அறிமுக நடிகையுமான சிந்தியா லூர்தே குறைவான காட்சிகளில் தோன்றி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார். இருந்தாலும் அவர் ஸ்ரீகாந்துடன் பாடல் காட்சியில் நடனமாடுவது கொடுமையான பரிசோதனை முயற்சி.
பழனி நாயகன் வேடத்தில் நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கரும், அவருக்கு ஜோடியாக வள்ளியம்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீரா கிருஷ்ணனும் ரசிகர்களை சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். இரண்டாம் பாதியில் பேராசை பிடித்த தன் மகனின் ஆணவப் போக்கை கண்டிப்பதற்காக எம் எஸ் பாஸ்கர் ஆங்கிலத்தில் பேசும் காட்சி சிறப்பு என்றாலும் ரசிக்கத்தக்கது என்றாலும் அதன் நீளம் அதிகம் என்பதால் போரடிக்கிறது.
பிரேம்ஜியின் நகைச்சுவையில் சிரிப்பு மிஸ்ஸிங். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் என் பி ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல் தருகிறது.
தினசரி - சராசரி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM