நடிகர் சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

14 Feb, 2025 | 04:03 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணாடி பூவே' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ்,  ஜெயராம்,  கருணாகரன் , சுஜித் சங்கர்,  ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் வித் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் மே மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணாலே என் கண்ணோடு மோதும் கண்ணாடி பூவே நீதான்டி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, இப்படத்தின் இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

காதலின் பிரிவையும், சோகத்தையும் முதன்மைப்படுத்திய இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.  இதன் காரணமாக இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இதனிடையே இந்தப் பாடல் சூர்யாவின் நடிப்பில் ஏற்கனவே வெளியான' ஏழாம் அறிவு' படத்தில் இடம்பெற்ற பாடலை நினைவுபடுத்துவதாகவும் இசை விமர்சகர்கள் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30