மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் ; சஜித் பிரேமதாச

14 Feb, 2025 | 03:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம். இராஜதுரை ஹஷான்)

கடந்த வாரத்தில் ஏற்பட்டதை போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவருகிறது. அதனால் இதுதொடர்பில் மின்சக்தி அமைச்சர் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  வெள்ளிக்கிழமை (14) ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இடம்பெறுமா? இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டைவிட்டு போகின்றனர். மின்சார தடை ஏற்படுகிறது. 

மின்வெட்டுக்கு தீர்வு என்ன? இந்த ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அதனால் அமைச்சர் இது தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

சூரியசக்தி மின் உற்பத்திக்கமைய கேள்வியிருக்காவிட்டால் அந்த தொழிற்பாடு ஞாயிற்றுக்கிழமை நடக்காவிட்டால் மின் தடை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

இதனால் இதற்கு நீங்கள் வழங்கும் தீர்வு என்ன? மின்வெட்டுக்கான காரணங்களையும் நீங்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை நீங்கள் புதிதாக தொழிற்சாலைகளை உருவாக்கி கேள்விக்கும் பாவனைக்கும் ஏற்றவாறு ஏதேனும் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்படாத வகையில் முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன? 

அவ்வாறு இன்றி குரங்காலும் மந்தியாலும் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்பது பதில் இல்லை. சம்பந்தப்பட்ட அமைச்சர் இங்குள்ளார். அவர் பதிலை வழங்க வேண்டும்.

மேலும் தற்போது அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதான செயலாளர்கள, மாவட்ட செயலாளர்கள் (பூலுக்குள்) மேலதிக கையிருப்பில் வைத்திருக்கின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எமது நாட்டை விட்டு செல்கின்றனர். வெளிப்படைத்தன்மையுடனும் போட்டித்தன்மையுடனுமே இந்த நாட்டின் அனைத்து விடயங்களும் இடம்பெற வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15