(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலிஸ் ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார். நல்லாட்சியை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பொலிஸார் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்கள் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சில உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் நிலையங்கள் வழங்கப்படவில்லை. மேலும் பலர் தாம் வகித்த பதவி நிலையை விட குறைந்த பதவி நிலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு புறம்பாக அரசாங்கத்தினால் தன்னிச்சையாக இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.
இதற்காகவா இந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்த்தப்பட்டது? சட்டத்தை ஒருபோதும் கையிலெடுக்க மாட்டோம் எனக் கூறிய ஜே.வி.பி.யே இன்று இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மஹரகம பொலிஸ் நிலையத்திலிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் முல்லைத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்காக பாரிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அவ்வாறெனில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கு என்ன பதிலளிக்கப் போகின்றார்?
இதற்கு பொலிஸ் ஆணைக்குழுவும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து அழுத்தம் பிரயோகித்துள்ளார். ஆனால் கடந்த தேர்தல்களில் நல்லாட்சியை எதிர்பார்த்து பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். இது தொடர்பில் அநீதி இழைக்கப்பட்ட பொலிஸார் நீதிமன்றம் செல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் பாராளுமன்ற அமர்வுகளின் போது ஏற்படும் செலவுகள் தொடர்பில் ஜே.வி.பி. கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றது. ஆனால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அறிவிப்பதற்காக வெறும் 20 நிமிடங்களுக்காக இவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டியுள்ளனர். 17ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. 20 நிமிடங்களுக்காக கோடிக்கணக்கில் செலவிடுவதை விட திங்களன்று இந்த தீர்ப்பினை அறிவித்திருக்கலாமல்லவா?
17ஆம் திகதி வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பித்து எதிர்க்கட்சிகளை பாராளுமன்றத்திற்குள் அடைத்து, தாம் தடையின்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். எனவே தான் இந்த காரணிகள் குறித்து அவதானம் செலுத்துமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இவர்கள் எவ்வாறான சதித்திட்டங்களை முன்னெடுத்தாலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் முன்னோக்கிச் செல்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM