புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆப்கானை சேர்ந்த இளைஞனே ஜேர்மனியின் மியுனிச் நகரில் காரால் பொதுமக்களை மோதினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
24 வயது நபரின் புகலிடக்கோரிக்கை 6 வருடங்களிற்கு முன்னரே நிராகரிக்கப்பட்டுவிட்ட போதிலும் அதிகாரிகள் அவரை நாடு கடத்தவில்லை என தெரிவித்துள்ள ஜேர்மனியின் ஊடகங்கள் பர்ஹாட் ஜட் என்ற நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என குறிப்பிட்டுள்ளன.
இவர் 2016 இல் ஜேர்மனிக்கு வந்தார் அடுத்த வருடம் இவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் ஜேர்மனியின் சகிப்புத்தன்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த நபர் ஜேர்மனியிலேயே தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அதிகாரிகள் அனுமதித்தனர்,என ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியி;ன் சகிப்புத்தன்மை பாதுகாப்பு திட்டம் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும் உயிராபத்தை கருத்தில் கொண்டு புகலிடக்கோரிக்கையாளர்களை உடனடியாக நாடுகடத்துவதை தடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கான் பிரஜை வியாழக்கிழi பொதுமக்கள் மீது காரால் மோதியதால் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் அவரை உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள ஜேர்மன் சான்சிலர் சந்தேகநபரை உடனடியாக நாடு கடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வன்முறையில் ஈடுபடுவதற்கு முன்னர் சந்தேகநபர் சமூக ஊடகங்களில் இஸ்லாமியகருத்துக்களை பதிவு செய்தார் என ஜேர்மனியின் டெர் ஸ்பைஜெல் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM