(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட். நிறுவனம் விவகாரம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபையில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கையின் பெயரை குறிப்பிட்டு சர்வதேச மட்டத்தில் பலவிடயங்கள் பேசப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உங்களுக்கு ( சபாநாயகர்) கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது அரசாங்கத்துக்கு நல்லதல்ல, ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படுமா, அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்னவென்பதை சபைக்கு அறிவியுங்கள் என வலியுறுத்தினார்.
சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன் என்று பதிலளித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடந்த வாரம் சபாநாயகரிடம்,
கடந்த காலங்களில் யு.எஸ்.எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 7.9 மில்லியன் டொலரை செலவழித்து ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு பயிற்சி வழங்கியுள்ளதாகவும், ஆண் மற்றும் பெண் பாலினத்தை பயன்படுத்தி அழைக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் உள்ளக மட்டத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் 'இலங்கை, பங்களாதேஸ்,உக்ரைன், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 09 நாடுகளின் அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காக யு. எஸ். எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 260 மில்லியன் டொலரை செலவு செய்துள்ளதாக' பதிவேற்றம் செய்துள்ளார்.
இதற்கு முன்னரும் இலங்கையில் சட்டத்தின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டின் இன நல்லிணக்கம், தேசியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் ஆண் - பால் பாலினம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் 7.9 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது என்பது பிரச்சினைக்குரியதொரு விடயமாகும்.
இலங்கையில் போராட்ட காலத்தில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும். அத்துடன் இந்த நிதியை பெற்றுக் கொண்ட நபர் அல்லது நிறுவனங்கள் தொடர்பிலும், அந்த நிதி எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதை ஆராய்வது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாததாக அமையும்.
ஆகவே இவ்விடயம் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM