வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கணினி திருத்தும் நிலையத்தில் இன்று பிற்பகல் 2.15 மணியவில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் பல இலட்சம் ரூபா பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

அச்சு இயந்திரம் ஒன்று திருத்தும் சமயத்தில் அதன் வயரில் ஏற்ப்பட்ட மின்சார கசிவு காரணமாக அச்சியந்திரத்தின் வயர் திடீரென தீப்பற்றியது. 

தீ பற்றிய வயரை அங்கு பணிபுரிந்த ஒருவர் நிலத்தில் தூக்கி எறிந்த சமயத்தில் நிலத்தில் இருந்த காபற்றில் பற்றி தீ கடை முழுவதும் பரவி கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

உடனடியாக நகரசபையின் தீயணைப்பு வாகனம் வரைவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இத் தீ விபத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்  மேலும் தெரிவித்தார்.