சட்டமா அதிபர் அனுர பி மெதகொட செயற்பட்ட விதத்தினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நியாயப்படுத்தியமை குறித்து படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கடும் விசனமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கபடநாடகமாடுகின்றார்இஇரட்டை நிலைப்பாட்டை பேணுகின்றார் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அஹிம்சா விக்கிரமதுங்க சட்டமா அதிபர் தனது தந்தையின் கொலை விசாரணைகளிற்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்கின்றார்இஎன தெரிவித்துள்ளார்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்திலேயே அஹிம்சா விக்கிரமதுங்க தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இலங்கைசட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பிரதமர் நீதியமைச்சர் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கும் இந்த கடிதத்தினை அவர் அனுப்பிவைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவும்;எங்கள் குற்றவியல் நீதித்துறையின் நேர்மையை தன்மையை பாதுகாப்பதற்காகவும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தமைக்காக ஜனாதிபதியை அச்சுறுத்தும் விதத்தில் நீங்கள் -7-2-25 எழுதிய கடிதத்தை பார்த்து கவலையடைந்தேன்.
2024 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி டெய்லிமிரருக்கு வழங்கிய பேட்டியில் மனித உரிமைகளிற்காக குரல் கொடுப்பதில் செயற்படுவதில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னணியில் நிற்பதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.
நீங்கள் விசேடமாக எனது தந்தை லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள் 'மிகச்சமீபத்தில் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தொடர்பில்இநாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம் அவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் கூட" என நீங்கள்தெரிவித்திருந்தீர்கள்.
ஆம்இ2009 ஆண்டு ஜனவரி 8 ம் திகதி பரவலாக கண்டிக்கப்பட்ட அரசாங்கத்தின் படுகொலையினால் அவரின் உயிர் பறிக்கப்படும் வரை எனது தந்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக விளங்கினார்.
அவர் பாசத்திற்குரிய தந்தைஇகணவர் மகன் சகோதரர்.அவரது பத்திரிகைகள் சர்வதேச அளவில் வாசிக்கப்பட்டன.
எனினும்அவர் பணிக்கு செல்கையில் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்களின் பின்னரும் நீங்கள் அவரை பற்றியோ அவருக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பது குறித்தோ ஒரு வார்த்தை கூற குறிப்பிடவில்லை.
எனது தந்தையின் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் அலுவலகம் அதனது அதிகாரத்தை வெளிப்படையாக துஸ்பிரயோகம் செய்யும்போது சட்டமா அதிபர் அலுவலகத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கான முயற்சிகள் என நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பாசாங்குத்தனமானது.
உங்கள் கட்சிக்காரர்களில் ஒருவரின்நலன்கள் என வரும்போது நீங்களும் உங்கள் சட்டத்தரணிகள் சங்கமும் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றீர்கள்.
2022 ஒக்டோபர் 12ம் திகதி விசேடஅதிரடிப்படையி;னரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ் இந்திக பிரபாத்தின் சார்பில் நீங்கள் ஆஜராகியிருந்தீர்கள்.
உங்கள் கட்சிக்காரர் கொலை செய்யப்பட்டார் என தீர்ப்பளித்த பலப்பிட்டிய நீதவான் இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டார்.
எனது தந்தை தொடர்பான வழக்கை போல இந்த வழக்கையும் தொடரவேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் 2024 ஆகஸ்ட் 27ம் திகதிதீர்மானித்தார். பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் அவர் இவ்வாறு தீர்மானித்தார்.
உங்கள் கட்சிக்காரரை சுட்டுக்கொன்ற விசேட அதிரடிப்படையை சேர்ந்தவருக்கு எதிரான வழக்கை தொடரவேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் தீர்மானித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM