அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் காதலர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (14) இரத்து செய்யப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை குறித்து விழிப்புடன் இருக்குமாறு கல்வி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த போலி அறிக்கையில் கல்வி அமைச்சின் கடித மாதிரி அமைப்பு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
குறித்த செய்தி தவறானது என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM