தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு நீதிமன்றத்தால் தீர்வு கிட்டாது; போராட்டமே இதற்கான வழி! - வேலன் சுவாமிகள்

14 Feb, 2025 | 11:19 AM
image

தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல. இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை என பொத்துவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். 

இந்த விடயத்தில் நீதிமன்றத்தில் எமக்கான  நீதியை எதிர்பார்க்க முடியாது. போராட்டமே இதற்கு வழி என்றும் அவர் குறிப்பிட்டார். 

நேற்று முன்தினம் வலி.வடக்கு தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

வலி. வடக்கு தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை அவர்களுக்கு தெரியாமல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது அடாத்தாக பிடித்து விகாரை அமைத்துள்ளனர். 

விகாரை கட்டும் வரை எங்கிருந்தீர்கள்? ஏன் அப்போது தடுக்கவில்லை என்று சிலர் இப்போது கேட்கிறார்கள். விகாரை கட்டுவது யாருக்கும் தெரியாமல் இருந்தது. மக்களுடைய காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் யாரையும் உள்நுழைய விடவில்லை.

விகாரையின் கட்டுமானங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடல்களில் முறையாக பேசப்பட்டது. கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. 

அதனையும் மீறி அரச படைகளின் பாதுகாப்புடன் குறித்த விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

இன்னும் சிலர் கேட்கிறார்கள்... தனியார் காணிகள் என்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை என்கிறார்கள்.

குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்பட்டபோது நீதி கிடைக்கும் என நம்பி நீதிமன்றம் சென்றோம். தடை உத்தரவு வழங்கியதையும் மீறி விகாரை கட்டப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் எமக்கான  நீதியை எதிர்பார்க்க முடியாது. போராட்டமே இதற்கு வழி என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19