பிடிகலயில் வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 2

14 Feb, 2025 | 12:47 PM
image

பிடிகல, மெட்டிவிலிய பகுதியில் உள்ள வீதியொன்றில், வெள்ளிக்கிழமை (14) பலத்த வெட்டுக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.

மெட்டிவிலிய சுபாகம வீதியில் வசித்து வந்த திருமணமாகாத 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நபரை தனிநபரொருவர் அல்லது குழுவொன்று ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மெட்டிவிலியவில் உள்ள இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போதே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான நீதவான் விசாரணை வெள்ளிக்கிழமை (14) நடைபெறவுள்ளதுடன், பிடிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20
news-image

சகல தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில்...

2025-03-23 17:49:19
news-image

சுகாதார துறையின் அபிவிருத்தி: ஐ.நா திட்ட...

2025-03-23 20:40:52
news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22