வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்

14 Feb, 2025 | 11:23 AM
image

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. 

தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

விவசாயிகள்  தமது சுயநலத்திற்காக பயணிகளினை கருத்தில் கொள்ளாது இவ்வாறு நடக்கின்றார்கள். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. எனவே அதனை கருத்தில் கொண்டு பொறுப்பான உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் பேசப்பட்டு வீதியில் மூன்றில் ஒரு  பகுதியிலேயே நெல் உலர்த்த முடியும் எனவும் இதனை பொலிஸார் கண்காணிப்பு செய்ய வேண்டும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தற்போது சிறு வீதிகளிலும், வீதியின் அரைவாசி பகுதிகளிலும் அதற்கு மேற்பட்ட பகுதிகளிலும் நெல் உலரவிடப்பட்டு வருகின்றதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19