வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் படுகாயம்

14 Feb, 2025 | 11:08 AM
image

முல்லைத்தீவு - முள்ளியவளை - முறிப்பு பகுதியில் ஒரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (13)  இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

முல்லைத்தீவு - முள்ளியவளை - முறிப்பு பகுதியில் குழுவினர் இணைந்து ஒருவருடன் வாய்த்தர்க்கதில் ஈடுபட்டுள்ளனர்.    

பின்னர், வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவத்தில் 36 வயது  மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் நபரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கௌரவ” என்று விளிப்பதா? இல்லையா? -...

2026-05-20 15:45:32
news-image

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின்...

2026-05-20 15:44:36
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்...

2026-05-20 15:26:54
news-image

உலக சுகாதார மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான்...

2026-05-20 15:38:05
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06